திருமந்திரம் - உபதேசம்

".சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே."

பொதிகை மலை (அகஸ்தியர் மலை)

வெப்பத்தினால் நெருப்பை உண்டுபண்ணுகிற கண்ணாடிவில்லையைச் சுற்றி பஞ்சை வைத்தாலும், கண்ணாடிவில்லையால் பஞ்சை எரிக்கமுடியாது. ஆனால், சூரியனின் கதிர்கள் கண்ணாடிவில்லையில் உட்செல்லுமாறு வைக்கும் போது கண்ணாடிவில்லையானது பஞ்சை எரித்துவிடுகிறது.


அதுபோல் ஆன்மாவால் தம்மை கீழ்மைப்படுத்தும் குற்றங்களிருந்து தாமே விடுபடமுடியாது.இறைவனே பரமகுருவாக எழுந்தருளும்போது ஆன்மாவினிடமிருந்து மலங்கள் நீங்கிவிடுகின்றன.


சூரியனின் கதிர்கள் சரியானபடி செல்லுமாறு கண்ணாடிவில்லையை வைக்கும்போது சூரியனின் கதிர்கள் ஒருமுகபட்டு பஞ்சில் வெப்பத்தை ஏற்படுத்தி பஞ்சை எரித்துவிடுகிறது. அதேபோல் ஆன்மாவானது தம்முள்ளே பரமகுருவை இருத்தி அதனுடைய நேர்கோட்டில் இருக்கும்போது, ஆன்மாவை சூழ்ந்திருக்கும் குற்றங்கள் நீங்கிவிடும்.


இறைவனே பரமகுருவாக எழுந்தருள்வதை விளக்கியவாறு.ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம

04/01/2018 அன்று "மஹான் ஸ்ரீஅகத்தியர்" அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square