மஹான் அருணகிரிநாதர்

சிவயோக மாவது சித்தசித் தென்று

தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்

அவயோக சாரா தவன்பதி போக

நவயோக நந்தி நமக்களித் தானே.


சிவயோகமாவது சித்து அசித்தென்று தெளிவதாகும்.அதன்படி, தவயோகத்துள் மூழ்கி தன்னுள் இருக்கும் ஒளியில் கலப்பதாகும்.தன்னுள் தான் அறிவதுதான் சிவயோகமாகும்,மற்றவை அவயோகமாகும். அவயோகம் சாராமல் பதியிடம் சேர நந்தியானவர் நவயோகத்தை நமக்களித்துள்ளார்.


சித்தென்பது சிவமாகும்.சிவம் சார்ந்த அனைத்தும் சித்து வகையைச் சார்ந்ததாகும்.மற்றவையனைத்தும் சடத்தன்மையதாகும்.இங்கனம் சித்து அசித்து வகை தெரிந்து, சித்துவின் நிலையறிந்து அது தன்னுள் பேரொளியாய் இருப்பதை உணர்ந்து அதனுள் தன்னோளியை (சிற்றொளி) கலப்பதே சிவயோகமாகும்.இவையில்லாமல் புறத்தில் தேடுவது அவயோகமாகும்,


இவ்வாறு அவயோகம் சாராமல் நாம் பதியிடம் சேர குருவான நந்தியானவர் நவயோகத்தை நமக்களித்துள்ளார்,


நவயோகமாவது நவஆகமங்களான காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மற்றும் மகுடம் ஆகும்.


சிவயோகியர் கடைபிடிக்கும் சிவயோகமாவது விளக்கியவாறு.


ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.

27/06/2018 அன்று "மஹான் அருணகிரிநாதர்" அவதாரதினத்தை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக சென்னை அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.


.

Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square