கும்பமுனி ஸ்ரீஅகஸ்தியர்


சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே

சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே

சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்

சோம்பர்கண் டாரச் சுருதிக்கண் தூக்கமே.

விளக்கம்;

சிவசித்தர்கள் செயல்பாடற்று இருப்பதும், கிடப்பதும் சுத்தவெளியாகிய வெட்டவெளியாகும். அவர்களின் உணர்வானது வேதங்களின் முடிந்த இடமாகிய நாதாந்தத்தில் கலந்து சுருதியின் அறிதுயிலில் ஆழ்ந்திருப்பார்கள். அறிதுயில் என்பது தன்னை மறந்தநிலை ஆனால் எல்லாம் உணர்ந்த நிலையில் இருப்பார்கள்.


தெளிவுரை:

இருப்பது என்பது அமர்ந்தநிலை, கிடப்பது என்பது படுத்தநிலை. செயல்பாடற்று சிவசித்தர்கள் எங்கும் சிவமாகி, தாமாகி அமர்ந்திருப்பது சுத்தவெளி எனும் வெட்டவெளி யாகும். அவ்வாறு வெட்டவெளியில் சிவமாகி இருக்கும் போது தன்னை மறந்து, எல்லாவற்றையும் உணர்ந்து வேதங்களின் முடிவான நாதாந்தத்தில் ஆழ்ந்து அறிதுயில் கொண்டு கிடப்பார்கள்.


இங்கு சோம்பர் என்பது எந்த செயலையும் செய்வதற்கு தேவையில்லாத நிலையில் செயல்பாடற்று, ஏகாந்தமாக இருப்பதே சோம்பராக கூறப்பட்டது.


சிவசித்தர்களின் செயல்பாடற்ற நிலையில் அறிதுயிலை விளக்கியவாறு.


ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.


26/12/2018 அன்று "கும்பமுனி" என்றழைக்கப்படுகின்ற மஹான் ஸ்ரீஅகஸ்தியரின் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக அம்பத்தூர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வ்ழங்கப்பட்டது.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square