ஸ்ரீ கருவூரார் - குருபூஜை


பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி

பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்

பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு

பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

- திருமந்திரம்

விளக்கம்:

சிவயோகியர் திருக்கூத்தைக் கண்டவுடன், உலகிற் பிரியாப் பெருநெறியையும், உலகிற் பிறவாத பெரும் பயனையும், பொது அம்பலத்தினின்று பிரியாத பெரும்பேற்றையும் பெற்று, உலகுடன் பேசாப் பெருமையை அடைகிறார்கள்.தெளிவுரை:

பொன்னம்பல திருக்கூத்தைக் காணும் போது, உலகமெங்கும் சிவமாகி எங்கும் தாமே ஆகி விடுவதால், உலகிற் பிரியாத பெருவழியை அடைகிறார்கள். அதனால் இறவாத நிலை ஏற்பட்டு, உலகிற் பிறவாத பயனை பெறுகிறார்கள். பொன்னம்பல திருக்கூத்தில் ஆழ்ந்து இருப்பதால் அதனனின்று பிரியாத பெரும்பேற்றை அடைந்து, சொற்கள் கடந்த அசபை ஆதலால், உலகுடன் பேசாப் பெருமையையும் அடைகிறார்கள்.பொன்னம்பலக்கூத்தைக் காண்பவர்களுக்கு இறப்பு கிடையாது. அதனால் உலகிற் பிரியாத பெருநெறியாகிய நித்திய ஜீவர்களாக முக்காலத்தும் கடந்து, வாழ்தலைப் பெறுகிறார்கள். இறப்பு இல்லையாதலின் மீண்டும் உலகிற் பிறவாப் பெறும்பயனையும் பெற்றார்கள். சிற்சபையை விட்டுப்பிரியாத பெறும்பேற்றினைப் பெற்றதால், உலகத்தா ருடன் பேசாப் பெருமையையும் பெற்றார்கள்.சிவயோகியர் அடையும் பெருமைகளை விளக்கிய வாறு.


ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
18/04/2019 அன்று 'குருதேவர்' மஹா சித்தபுருஷர் "ஸ்ரீ கருவூரார்" அவதார திருநாளை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக மாலையில் குருபூஜை நடைபெற்றது.

Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square