top of page

மனுமுறை கண்ட வாசகம்

  • அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள்
  • Oct 17, 2017
  • 1 min read

01. நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ 02. நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ 03. வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ 04. வரவுபோக் கொழிய வழியடைத்தோனோ 05. தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ 06. தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ 07. கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ 08. களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ 09. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ 10. மண்ணோரம் பேசி வாழ்வழித்தோனோ 11. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ 12. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்த்தேனோ 13. ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ 14. இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ 15. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ 16. ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ 17. பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ 18. பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ 19. ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ 20. அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ 21. வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ 22. வெய்யிலுக் கொதுங்கும் விருட்ச மழித்தேனோ 23. பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ 24. பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ 25. கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ 26. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனொ 27. கற்பழிந் தவளைக் கலந்திருந்தேனோ 28. கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ

29. காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ 30. கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ 31. கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ 32. கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ 33. குருவை வணங்கக் கூசிநின்றேனோ 34. குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ 35. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ 36. பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ 37. கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ 38. தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னெனோ 39. ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ 40. சிவனடி யாரைச் சீறி வைதேனோ 41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ 42. மாதா பிதாவை வைதுநின்றேனோ 43. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ 44. தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ என்ன பாவம் செய்தேனோ இன்னதென் றறியேனே.

ஒம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம

"வள்ளலார்" எனும் "அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள்' அவதார தினமான 05/10/2017 அன்று "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அன்னதானம் அம்பத்தூரில் நடைபெற்றது.

 
 
 

Comments


Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • YouTube Social  Icon

SRI KARUVUR SIDTHAR PEETAM© 2017 . All rights reserved.

bottom of page