அறம் செய்
- பழநி கந்தசாமி
- Feb 10, 2020
- 1 min read

ஒரு நூல் என்றால் அறத்தைப் பற்றியும், அதனால் கிடைக்கும் பொருள் பற்றியும், பொருளினால் அடையும் ஆனந்தத்தைப்(இன்பம்) பற்றியும், ஆனந்தத்தினால் விளையும் வீடு(மோட்ஷம்) பற்றியும் கூற வேண்டும். அதாவது அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகியன பற்றி கூறியிருக்க வேண்டும்.
இதில் அறமே முதலில் உள்ளது. அறம் செய்தால் மட்டுமே, அதனால் மற்ற மூன்றும் கிடைக்கும்.திருவள்ளுவர், திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரம்,இல்லறவியல்,துறவறவியல் மற்றும் ஊழியல் என நான்காகப்பிரித்து, அதில் பாயிரத்தில் அறத்தின் முக்கியத்தைக் கருதி “அறன் வலியுறுத்தல்” என்ற அதிகாரத்தை வைத்துள்ளரர்.
ஒர் உயிர்க்கு சிறப்பையும்,செல்வத்தையும் அளிக்கக்கூடிய, அறத்தைவிட நன்மையானது இல்லை.அதனால் நாம் எங்கு இருப்பினும்,எங்கு சென்றாலும் “அறம் செய்” என்கிறார். அறம் செய், அதைவிட மேலானது இல்லை என்ற வள்ளுவர், மனத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே அறம் என்று விளக்குகிறார்.
அந்தக்குற்றமும் என்னென்ன என்று கூறுகிறார். பொறாமை,ஆசை,கோபம் மற்றும் கடுமையான சொல் இந்த நான்கும் தன்னை ஆதிக்கம் செலுத்தாமல் இவற்றை ஒடுக்கி வாழ்வதே அறஞ்செயலாகும்.
இவ்வாறு ஒருவன் ஒவ்வொருநாளும் அறம் செய்வானாகில்,அது அவனுக்கு மறுபிறவிக்குச் செல்லும் வழியையடைக்கும் கல்லாகும்.ஆதலால் இந்த அறத்தினால் மட்டுமே “உயிர்க்கு” இன்பம் தரும், மற்றவை தாராது.
ஆகையால் ஒவ்வொருவரும் அறஞ்செய்து, மறுபிறவி எனும் பழியிலி ருந்து காத்துக் கொள்ளவேண்டும்.
ஓம் அகத்தீசாய நம ஓம் நந்தீசாய நம ஓம் திருமூலதேவாய நம ஓம் கருவூரார் தேவாய நம
08-02-2020 அன்று தைப்பூசம் மற்றும் 'இராமலிங்க சுவாமிகள்' என்னும் வள்ளலார் 'அருட்பெருட்சோதியான' தினத்தை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.





























Comments