மஹான் பாபாஜி & கோரக்கர்
- பழநி கந்தசாமி
- Nov 25, 2019
- 1 min read


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. - திருமந்திரம்
விளக்கம்:
குருவின் திருமேனியைக் காண்பதும் அவரின் திருநாமத்தைச் சொல்வதும் அவருடைய திருவார்த்தையைக் கேட்பதும் அவரின் திருவுருவத்தைச் சிந்தித்திருப்பதும் நாம் தெளிவடைந்து, செல்வதற்கான ஞானத்தின் வழிகளாகும்.
தெளிவுரை:
நாம் ஞானம் அடைவதற்கு முதல் படி, நமக்கு நல்ல குரு அமைய வேண்டும். அந்த குருவைத் தேடி அவர் திருப்பாதத்தில் சரணடைவதுதான், குருவின் திருமேனியைக் காண்பதாகும். பின் குருவைக் கண்டு, போற்றித் தொழுதுதல் வேண்டும். போற்றிப் புகழ்வதுவே, குருவின் திருநாமம் சொல்வதாகும்.
குருவானவர் மனம் மகிழ்ந்து நமக்கு உபதேசிப்பார். அந்த உபதேசத்தை நாம் கேட்பதே, குருவின் திருவார்த்தைக் கேட்பதாகும். உபதேசத்தைக் கேட்டு, குருவின் திருவுருவத்தைத் தியானிப்பதே நாம் தெளிவடை வதற்கான (ஞானத்திற்கான) வழிகளாகும்.
சிவ ஞானத்தை அடைவதற்கு நமக்கு நல்லகுரு அமையவேண்டும். அந்த குரு அமைய நாம் சிவத்தின் மீது தீவிரமான அன்பு செய்யல் வேண்டும். தீவிரமான அன்பே நமக்கு நல்லதொரு சிவகுருவை எதிர்படவைக்கும்.
நாம் சிவஞானம் அடைவதற்கு, குருவைக் கண்டு, போற்றி, கேட்டு,
தியானிப்பதே என்றவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
20-11-2019 புதன்கிழமை அன்று 'மஹான்கள் பாபாஜி, கோரக்கர்' அவர்களின் அவதார திருநாளை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் நடைபெற்றது.






























Comments