top of page

திருமந்திரம் - உபதேசம்

“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்

பதியினைப் போற்பசு பாசம் அனாதி

பதியினைச் சென்றணு காப்பசு பாசம்

பதியணு கிற்பசு பாசநில் லாவே.

பதி என சொல்லப்படும் பரம்பொருள், பசு என சொல்லப்படும் ஆன்மா, பாசம் என சொல்லப்படும் குற்றம் என்று மூன்று சொல்லப்படுகிறது. பதியைப் போல் பசுவும்,பாசமும் அனாதிகளாக ஆதி காலம் தொட்டே உள்ளன.பதியிடம் இயல்பாக பசுவும்,பாசமும் சென்று சேராது.பதியானது ஆன்மாவின் பக்குவத்திற்கேற்ப, பசுவிடம் சேரும்போது பசுவிடமிருந்து பாசம் தங்காது நீங்கிவிடும்.

பசுவிடம், பதி தங்கி பாசம் நீக்கும் முறைமையை சொல்லியவாறு.

பசு என்றால் கட்டுன்றுள்ளது என்று பொருள்.பசுவிற்கு தனித்து இயங்கும் தன்மை இல்லை.பதி அல்லது பாசத்தையோ சேர்ந்திருக்கும்.ஆனால் பசு, இயல்பாக பாசத்தையே சேர்ந்திருக்கும் தன்மை கொண்டது.அதனால்தான் பசு கீழ்மை உணர்வு கொண்டுள்ளது.

பதியானது வடதுருவம் என்று கொண்டால் பாசமும் வடதுருவமாகும். ஆதலால் பதியும்,பாசமும் சேரவே சேராது.பசுவானது தென்துருவமாகும்.

இயல்பாகவே பாசத்திடம் கட்டுண்டுருக்கும் பசுவை நோக்கி பதி வரும் போது பதியின் சக்தியினால் பசுவிடமிருந்து பாசம் நீங்குகிறது.

ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம

மஹான் "தன்வந்திரி" அவதார தினமான 08-11-2017 முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக "ஆனந்தம் முதியோர் இல்லத்தில்" 06-11-2017 அன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

.

Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page