மஹா சிவராத்திரி
- பழநி கந்தசாமி
- Feb 13, 2018
- 1 min read

வாசி வாசி சுவாசி சுவாசி வாசி வாசி சுவாசி சுவாசி
வாசி மாறும் சிவா ஆம் வாசி வசமாகும் சிவ மாம் -----
யோக சிவநெறியில் செல்லும் போது
யாகமாகவே கொண்டு செல்லவே வேண்டும்
எண்ணங்கள் இரண்டையும் சேர்த்தே வைத்து
அண்டங்கள் யாவையும் தாண்டிச் செல்வோம் ---- வாசி
குண்டலிணிச் சக்தியை ஐம்புலன டக்கத்தில்
மண்டலம் மூன்றும் தாண்டும் போது
நமது உலக வாழ்க்கைக்கு தேவையான
நலங்கள் யாவும் கிடைக்கப் பெறுகிறதே ----- வாசி
கண்டத்தில் உள்ள விசுத்தியைக் கடக்கும்போது
அண்டங்கள் யாவையுமே மூர்ச்சித்து போகுமே
விஷத்தன்மையை மாற்றும்காலம் “மாஹாசிவராத்திரி” தானே
விஷ்ணு பிரமன் தேவர்கள் போற்றுவர் பரமனைத் தானே.
“சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்ன சிவகதி தானே”.
சிவாய நமசிவாய நமஓம் சிவாய நமசிவாய நமஓம்
சிவாய நமசிவாய நமஓம் சிவாய நமசிவாய நமஓம்.
ஒம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம
.
























Comments