திருமந்திரம் - உபதேசம்
- பழநி கந்தசாமி
- Mar 30, 2018
- 1 min read

"மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தானப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தானுள் நயந்தான் அறிந்தே".
ந,ம,சி,வ,ய.இந்த ஐந்தின் தலத்திற்கும் அதிபதியான சதாசிவன்,ஆன்மாவின் மலங்களைந்தையும் மாற்றியருளி புலங்களில் ஒன்றாமல் அவற்றைக் களைந்து,உலகப்பற்றுக்கு ஏதுவான நலங்களை நீக்கி,அம்பலத்தில் இருந்து ‘தன்னை’ அடைய விரும்புகிறவர்களுக்கு அருள் புரிகிறார்.
மலங்கள் ஐந்தான ஆணவம்,கன்மம்,மாயை,திரோதயி மற்றும் மாயேயம் என்பன.இவைகள் ஆன்மாவை ‘தான்’ யார் அறியவிடமால் கீழ் நோக்கி வைத்து இறப்பு,பிறப்பிற்கு காரணமாகிறது.
பொதுஅம்பலத்தில் வீற்றிருக்கும் குருநந்தி ஆன்மாவை மயக்கும் மலங்களை தம் அருளால் மாற்றி,புலனைந்தும் பொறிவழியில் செல்லாமல்,உலக இன்பங்களை களைந்து,தலங்களைந்தையும் கடக்க வைத்து, அருள் புரிகிறார்.
குருநந்தி அருள் செய்தவாறு.
























Comments