மஹான் ஸ்ரீ ஞானேஸ்வரர்
- பழநி கந்தசாமி
- Aug 2, 2018
- 1 min read

அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே. - திருமந்திரம்
விளக்கம்:
சிற்றொளி பேரொளியோடு கலக்கும்போது தன்னிலை மாறி உலகமெங்கும் தானான உண்மையை அளிக்கிறான். அமரர்களும் அறிய முடியாத உலகத்தை அளிக்கிறான். பொன்னம்பலத்தில் திருநடனம் ஆடும் திருப்பாதத்தைக் காண வைக்கிறான். அந்த திருப்பாதத்தைக் கண்டதால் பேரின்பம் உண்டாகி அருள்வெளியில் ஏகாந்தத்தில் திளைக்க வைக்கிறான்.
தெளிவுரை:
பரமாத்மா, ஆத்மாவை தன்னுள் கலந்தருள் செய்யும்போது உலகமெங்கும் தானான உண்மையையும், ஆத்மாவும் தான் உலகமெங்கும் இருப்பதையும் அளிக்கிறான். அமரர்களுக்கும் அறியாத உலகத்தை சிவயோகியர்களுக்கு அளிக்கிறான்.
பொன்னம்பலத்தில் திருநடனம் (ஆக்ஞையில் அருட்பெருஞ்சோதியின் அசைவே திருநடனம்) ஆடும் திருப்பாதத்தைக் காண வைத்து, அதனால் பேரின்பம் உண்டாக்கி அருள்வெளியில் ஏகாந்தத்தில் திளைக்க வைக்கிறான்.
சிவம் சிவயோகியர்களுக்கு அளிக்கின்ற அருள் தன்மையை விளக்கியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம!
23-07-2018 அன்று "மஹான் ஸ்ரீ ஞானேஸ்வரர்" அவதாரதினத்தை முன்னிட்டு 28-07-2018 அன்று சனிக்கிழமை "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.



























Comments