மஹான் சுந்தரானந்தர்
- பழநி கந்தசாமி
- Sep 22, 2018
- 1 min read
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
விளக்கம்:
ஒடுங்குதல், அடங்குதல், விரவுதல் இந்த மூன்றில், எவை எவற்றுள் ஒடுங்க வேண்டும், எவை எவற்றுள் அடங்க வேண்டும், எவை எவற்றுள் விரவ வேண்டும் என்பதை சிவசித்தர்களே தெளிந்திருப்பார்கள்.
தெளிவுரை:
தன்னுள் உள்ள சிற்றொளி பேரொளியில் ஒடுங்கும் முறைமையும், தன்னுள் உள்ள இயக்கம் பேரியக்கத்தில் அடங்கும் ஒழுங்கும், தன்னுள்ளே உணர்ந்த வெட்டவெளி பெருவெளியில் விரவும் இயற்கையை உணர்ந்தவரே சிவசித்தராவார்கள்.
சிவசித்தர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று உணர்ந்தவர்கள். அண்டத்திலுள்ள அருட்பெருஞ்சோதியில் பிண்டத்தில் உள்ள ஆத்மஜோதியை கலக்கும் முறை அறிந்துச் செயல்படுவார்கள்.
அவ்வாறு கலந்திரும்போது இயற்கையோடு இயற்கையாக விரவி விடுவார்கள்.
சிவசித்தர்கள் இயற்கையை உணர்ந்து செயல்படும் தன்மையை விளக்கியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம
30/08/2018 அன்று "மஹான் சுந்தரானந்தர்" அவதார தினத்தை முன்னிட்டு "ஸ்ரீகருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.





























Comments