மஹான் திருமூலநாதர்
- பழநி கந்தசாமி
- Sep 26, 2018
- 1 min read

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.
விளக்கம்:
தம்முள்ளே உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து, நாதத்தையும் நாதாந்தத்தையும் தம்முள் கொண்டு, அழியும் தத்துவத்தை தாண்டி அழியாத நித்தராகி, குற்றங்கள் இல்லாத நிமலராகி, ஓர் இடத்தில் மட்டுமல்லாது எல்லா இடத்திலும் இருந்து நீள்பரமுத்தராகி, சிவலோகத் தன்மையை இங்கே உணர்பவர்களே சித்தர்கள்.
தெளிவுரை:.
சித்தர் என்பவர் யார் என்ற விளக்கத்தை இந்தப்பாடலில் திருமூலர் விளக்குகிறார்.
சித்தர்கள் தம்முள்ளேயே சிவலோகத்தைக் காண்பவர்கள், அது எவ்வாறெனில் அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்ற மூன்று மண்டலத்திலும் உள்ள கலைகள் முறையே எட்டு, பன்னிரண்டு மற்றும் பதினாறு ஆகிய முப்பத்தாறையும் கடந்து, நாதத்தையும் நாதாந்தத்தையும் அடையும்போது அநித்தியத்திலிருந்து நித்தியமாகி நித்தராகிறார்கள். நித்தர்களிடம் குற்றங்கள் நீங்கி விடுவதால் நிமலனாகிறார்கள்.
இயற்கையோடு இயைந்து இருப்பதால் நீள்பரமுத்தராக திகழ்கிறார்கள்.
சித்தர் என்பவர்கள் யார் என்று விளக்கியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
21/09/2018 அன்று "மஹான் திருமூலநாதர்" அவதாரதினத்தை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.






























Comments