மஹான் தன்வந்திரி
- பழநி கந்தசாமி
- Jan 25, 2019
- 1 min read

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
விளக்கம்:
முப்பத்தாறு தத்துவங்களையும் முத்திக்குச் செல்லும் ஏணிப்படியாய்க் கொண்டு மேலேறி, ஒப்பிலாத ஆனந்தத்தை நல்கும் பேரொளியில் கலந்து சொல்லுதலுக்கரிய சிவத்தை தரிசனம் செய்து, தான் தெளிந்து கிடைத்தற்கரிய பரிசாக தாமே சிவமாய் அமர்ந்திருந்தார் என்றவாறு.
தெளிவுரை:
முப்பத்தாறு தத்துவங்களும் சிவலோகத்திற்குச் செல்லும் ஏணியாய்க் கூறப்பட்டது, ஒவ்வொரு அடியையும் கவனமாக கடக்கவேண்டும். தத்துவம் ஒவ்வொன்றையும் புரிந்து அதனை கவனமாக தாண்ட வேண்டும். கரணம் தப்பினால் மரணமாகி, மீண்டும் பிறப்புக்கு ஏதுவாகிவிடும்.
அவ்வாறு முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து, பேரொளியில் கலக்கும் போது எதற்கும் ஒப்பிலாத ஆனந்தத்தில் மூழ்கி, சொல்லுக்கு எட்டாத சிவத்தைத் தரிசித்து, அதனால் தான் தெளிந்து கிடைத்தற்கரிய பரிசாக தாமே சிவமாய் அமர்ந்திருந்தனர் சித்தர்கள்.
முப்பத்தாறு தத்துவங்களின் உயர்வையும் அதன் அருமையும் கூறியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
30/10/2018 அன்று "மஹான் தன்வந்திரி" அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக, அம்பத்தூர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.



























Comments